பள்ளியில் ஆங்கில ஆசிரியர் செய்த அசிங்க வேலை - கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்

x

பெரம்பலூர் அருகே உள்ள அரசு பள்ளியில் பெண் கணினி பயிற்றுநருக்கு, பாலியல் தொந்தரவு அளித்த ஆங்கில ஆசிரியரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் அருமடல் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில், விமல்ராஜ் என்பவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் கணினி பயிற்றுநராக பணிபுரியும் பெண்ணுக்கு பாலியியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, விமல்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பள்ளி ஆசிரியரே பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்