இன்ஜினீயரிங் மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை
- இன்ஜினீயரிங் மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை
- கரூரில், இன்ஜினீயரிங் மாணவன் கை கால்களை கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உயிரிழந்தவர், இரும்பூதிபட்டி பகுதி சடையம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் இளைய மகன் அருண் ஆவார். இன்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் 4ஆம் ஆண்டு படித்து வந்த இவரை பெற்றோர் காணவில்லை எனத் தேடி வந்தனர்.
- இந்த சூழலில், 50 அடி ஆழ கிணற்றில் உயிரிழந்த அருண் தனது கை கால்களை கட்டியபடி, சடலமாக மீட்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

