பொறியியல் மாணவர் சேர்க்கை முதன்முறையாக இரண்டரை லட்சத்தை தாண்டிய விண்ணப்பங்கள்

x

பொறியியல் மாணவர் சேர்க்கையில் முதல்முறையாக 2025 - 2026 கல்வியாண்டில் இரண்டரை லட்சத்தை தாண்டி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பொறியியல் படிப்புக்கு மே 7ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, மே 31ஆம் தேதி நிலவரப்படி, 25 நாட்களில் இரண்டு லட்சத்து 74 ஆயிரத்து 693 மாணவர்கள் பதிவு செய்தனர். இதில், ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 646 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து உள்ளனர். மேலும், 2 லட்சத்து 12 ஆயிரத்து 593 மாணவர்கள் கலந்தாய்வுக்கான கட்டணங்களை செலுத்தி உள்ளனர். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 6 ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால், விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை, 3 லட்சத்தை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்