பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு - விரைவில் தொடங்க தொழில்நுட்ப கல்வி முடிவு

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவை விரைவில் தொடங்க தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு - விரைவில் தொடங்க தொழில்நுட்ப கல்வி முடிவு
Published on

2020-21 கல்வி ஆண்டு பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் பதிவை தொடங்க தொழில்நுட் கல்வி இயக்குநரகம் தயாராகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைன் பதிவு செய்ய நாற்பது நாட்கள் வரை, மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெறுவதால், அவர்களுக்கு தனியாக நான்கு நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், நடப்பாண்டு கொரோனா நெருக்கடி காரணமாக, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com