3 ஆண்டுகளாக ROOMஐ விட்டு வெளியே வராத இஞ்சினியர் - அதிர்ச்சி காரணம்
3 ஆண்டுகளாக அறைக்குள் முடங்கி கிடந்த கணினி பொறியாளர்
நவிமும்பையில் கணினி பொறியாளர் ஒருவர்
மூன்று ஆண்டுகளாக தன்னைத்தானே அறைக்குள் பூட்டிக்கொண்டு, முடங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையை சேர்ந்த 55 வயதான அனுப்குமார் நாயர், தனது பெற்றோரின் மரணம் மற்றும் மூத்த சகோதரரின் தற்கொலையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக, 3 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிற்குள்ளேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு கொண்டுள்ளார். ஆன்லைன் மூலம் மட்டுமே உணவு ஆர்டர் செய்து சப்பிட்டு வந்த அனுப் குமார் குறித்து, பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த தகவலை அடுத்து, தனியார் தொண்டு நிறுவன குழு அவருக்கு மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்துள்ளது.
Next Story
