தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. ஒன்றரை கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிப்பு

x
  • தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை...
  • ஒன்றரை கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிப்பு...
  • தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் உறவை முறித்த ஃபெப்சி...
  • கிளைமேக்ஸை நெருங்கும் ஃபெப்சி பஞ்சாயத்து...
  • எம்புரான் படத் தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் ED Raid...
  • கணக்கில் வராத ஒன்றரை கோடியை கைப்பற்றிய அமலாக்கதுறை...
  • எம்புரானை இயக்கி நடித்திருந்த பிருத்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ்...
  • திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடனான உறவை முறித்துக்கொண்ட ஃபெப்சி... கூட்டணி மாறிய ஆர்.கே. செல்வமணி..
  • இது தான் இந்த வாரம் கோடம்பாக்கத்தையே பரபரக்க வைத்திருக்கும் பிரேக்கிங் ஸ்டோரிஸ்..
  • மேலிட பிரச்சனையாக உருவெடுத்து கடந்த ஒருவாரமாக அறிக்கை மோதலாக வெடித்துக்கொண்டிருந்த பஞ்சாயத்து தற்போது அதன் க்ளைமேக்ஸை நெருங்கியுள்ளது.
  • கோலிவுட்டையே சிக்கலில் சிக்க வைத்திருக்கும் சம்பவங்களை ஒவ்வொன்றாக விசாரிக்க தொடங்கினோம்.
  • எம்புரான் வெளியாகி பத்து நாட்களை கடந்த பிறகும் அது தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது.
  • குஜராத் கலவரத்தை நினைவுபடுத்துவது போன்ற காட்சிகளுக்கு பாஜகவினரிடமிருந்து கண்டங்கள் குவியவும் 17 இடங்களில் கட் செய்தது படக்குழு... அதன் தொடர்ச்சியாக மோகன்லாலின் மன்னிப்பு கடிதம்... முல்லை பெரியாறு அணையை குறிப்பிடும் வகையில் அமைந்த சர்ச்சைக்குரிய வசனம்... படத்தை தடை செய்யக்கோரி தமிழகத்தில் வெடித்த விவசாயிகள் போராட்டம் என படம் வெளியான பத்து நாட்களில் எம்புரான் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் கொஞ்ச நெஞ்சமில்லை.
  • இந்த நிலையில் தான் வெள்ளிக்கிழமை எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபலனுக்கு சொந்தமான நான்கு இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
  • கடந்த 2017 ம் ஆண்டு கோகுலம் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
  • குறிப்பாக, சென்னை நீலாங்கரையிலுள்ள தயாரிப்பாளர் கோபலனின் வீட்டிலும், கோடம்பாக்கத்திலுள்ள அவருடைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினரின் அதிரடி சோதனை நடந்தது.
  • 20 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில் அமலாக்கதுறையினர் கணக்கீல் வராத ஒன்றரை கோடி ரூபாயை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
  • இந்த நிலையில் தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், ஃபெப்சி யூனியனுக்குமிடையே ஊசலாடி கொண்டிருந்த உறவு தற்போது கிளைமேக்ஸை நெருங்கி உள்ளது.
  • ஃபெப்சி யூனியனின் தலைவராக உள்ள ஆர்.கே. செல்வமணி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியாக தொடங்கப்பட்ட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.
  • அதன்காரணமாக தற்போது முரளி தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் “தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு“ என்ற பெயரில் ஃபெப்சிக்கு போட்டியாக மற்றொரு அமைப்பை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
  • இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி. ஆர்.கே.செல்வமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமட்டியுள்ளார்.
  • ஆர்.கே. செல்வமணி அவருக்கு நெருக்கமான பணக்கார படத்தயாரிப்பாளர்களுக்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இது தொழிலாளர்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கை என்று முரளி சூட்டிக்காட்டி இருக்கிறார்.
  • ( நாங்க 250 படம் எடுத்தோம் அவங்க 10 படம் தான் பண்ணி இருக்காங்க என சொல்வது )
  • 50 ஆண்டுகால பாரம்பரியமிக்க சங்கத்தைவிட்டு ஆர்.கே.செல்வமணி அவரின் சுயநலனிற்காகவே பிரித்து சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள தயாரிப்பாளர் முரளி ஃபெப்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
  • ( ஏக்கர் நிலத்த வாடகைவிட்டு ஏமாத்துறாங்க பாய்ன்ட் )
  • இதுமட்டுமின்றி, நடிகர் தனுஷுக்கும், ஃபைவ் ஸ்டார் கதிரேசனுக்குமிடையிலான பிரச்சனை நடிகர் சங்கத்திற்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்குமிடையிலானது. அதில் ஆர்.கே.செல்வமணி எதற்காக அரசியல் உள்நோக்கத்தோடு கட்டபஞ்சாயத்து செய்கிறார் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்.
  • மேலும், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தரப்பினர் பலமடங்கு வட்டி கேட்பதாக ஆர்.கே.செல்வமணி தெரித்திருந்த கருத்துக்கும் மறுப்பு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கம், தனுஷிடம் கால்ஷிட் மட்டுமே எதிர்பார்த்து காத்திருந்ததாக விளக்கம் கொடுத்துள்ளனர்.
  • இந்த விவகாரம் தற்போது கோடம்பாக்க வட்டாரத்தில் புயலாக வீச தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் முரளியின் குற்றச்சாட்டுகளுக்கு ஃபெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணி மறுப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய முடிவு முழுக்க முழுக்க தொழிலாளர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்றும், தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பவர்களோடு பணி புரிய மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  • புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பிலும் ஃபெப்சி யூனியனில் இருப்பவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து கொள்ளலாம் என தமிழ் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஆர்.கே.செல்வமணி ஏழாம் தேதி வரை காத்திருப்போம் ஃபெப்சிக்கு போட்டியாக புதிய சங்கத்தை தொடங்கினால் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தோடு பயணிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
  • ( ஆர்.கே.செல்வமணி )
  • தயாரிப்பாளர்களை நம்பி பிழைப்பை நடத்த கூடிய தொழிலாளர்களின் நலன் கருதி இந்த விவகாரத்தில் இரண்டு தரப்பினரும் பேசி சுமூக தீர்வு காண வேண்டுமென்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்