Elephant Attack || திடீரென யானைக்குப் பிடித்த மதம்..! கோயில் திருவிழாவில் பரபரப்பு

x

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக-கேரள எல்லையை அடுத்த பொழியூர் மஹாதேவர் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆறாட்டு ஊர்வலத்திற்காக பாறசாலை பகுதியை சேர்ந்த சிவசங்கரன் என்ற யானை அழைத்து வரப்பட்டது. ஊர்வலம் முடிந்து கோவிலை சுற்றி வலம் வந்தபோது திடீரென யானைக்கு மதம் பிடித்தது. இதனால் அச்சமடைந்த பக்தர்கள் ஓடி ஒளிந்துகொண்டனர். அதிர்ஷ்டவசமாக பாகன்களும் ஓடி தப்பிய நிலையில், கோயிலைச் சுற்றி நடப்பட்டிருந்த மரங்கள், மதில் சுவர் மற்றும் கூரை ஓடு ஆகியவற்றை யானை இடித்து சேதப்படுத்தியது. சுமார் 4 மணி நேரம் போராடி யானையை பாகன்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்


Next Story

மேலும் செய்திகள்