யானையை விரட்ட பட்டாசு வீசியோர் மீது வழக்கு

x

ஊட்டி பிரதான சாலையில் உலா வந்த யானையை பட்டாசு வெடித்து விரட்டியவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஓடந்துறை காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை உணவுத்தேடி மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் உலா வந்தது. அப்போது, சாலையோரம் இருந்த கடையில் தர்பூசணி பழங்களை சாப்பிட்ட யானை மீது பட்டாசுகளை வீசி சிலர் விரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், யானையை விரட்ட பட்டாசுகள் வீசியோர் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்