Elephant | இரவோடு இரவாக காட்டு யானைகள் செய்த அட்டகாசம்பல லட்சம் ரூபாய் நஷ்டம்.. விவசாயி வேதனை
ஓசூர் அருகே 40 தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : விவசாயி வேதனை ஒசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கண்டகானபள்ளி
கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாதாரெட்டி (45) இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 5 ஏக்கர் அளவில் கடந்த 5 ஆண்டுகளாக தென்னங்கன்றுகளை நட்டு டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி நன்கு பராமரித்து வளர்த்து வந்தார். இந்த தென்னை மரங்கள் தற்போது நன்றாக வளர்ந்துள்ளன.இந்த நிலையில் நேற்று இரவு இரண்டு காட்டு யானைகள் இவரது தென்னந்தோப்பிற்குள் புகுந்து 40 தென்னை மரங்களையும் ஒடித்து தின்று சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து இரவு நேரத்தில் விவசாயி மாதாரெட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வந்து காட்டு யானைகளை விரட்டவில்லை என கூறப்படுகிறது. காலையில் தோட்டத்திற்கு சென்ற விவசாயி தென்னை மரங்கள் அனைத்தும் சேதமாகி கிடப்பதை கண்டு கடும் வேதனை அடைந்தார். இதனால் அவருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.அந்த பகுதியில் காட்டு யானைகள் விவசாயிகள் பயிரிட்டுள்ள விளை பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
