AI | Elephant | 2,500 முறை யானைகளின் உயிரை காப்பாற்றிய AIஎப்படி?
மதுக்கரை - வாளையாறு இடையே பொருத்தப்பட்டுள்ள AI தெர்மல் கேமராக்கள் உதவியால், 2,500 முறை யானைகள் ரயில் தண்டவாளங்களை பாதுகாப்பாக கடந்துள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரை, ஐந்தாயிரத்து 11 முறை ஏஐ நவீன கேமராக்கள் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கை விடுத்ததாக குறிப்பிட்ட அவர், இதன் மூலம் 2 ஆயிரத்து 500 முறை யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்துள்ளதாக பதிவிட்டார்.
Next Story
