

தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான பாலக்காடு அருகே ரயிலில் அடிபட்டு ஆண் யானை உயிரிழந்துள்ளது. பாலக்காடு மாவட்டம் வாளையாறு வனச்சரகத்திற்கு உட்பட பகுதியில் 25 வயது ஆண் யானை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியை கடக்கும் போது ரயில்கள் மிதமான வேகத்தில் வேண்டும் என்ற உத்தரவை கடைபிடிப்பதில்லை என்று வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.