"பசி.. ருசி.. அறியாது" - காய்ந்த புற்களைத் தின்ற யானைகள் - வெளியான பரிதாப காட்சி

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. யானை கூட்டங்கள் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்ய அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. குட்டிகளுடன் உள்ள யானைகள் அதிக தூரம் இடம்பெற முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில், யானைக் கூட்டம் ஒன்று காய்ந்து போன புற்களைத் தின்ற அவலக் காட்சிகள் வெளியாகி உள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com