காயங்களுடன் மக்னா யானை உயிரிழப்பு - விசாரணை

காயங்களுடன் மக்னா யானை உயிரிழப்பு - விசாரணை
Published on

காயங்களுடன் மக்னா யானை உயிரிழப்பு - விசாரணை

50 வயது மதிக்கத்தக்க மக்னா யானை மாநில நெடுஞ்சாலையில் காயங்களுடன் உயிரிழப்பு. மூன்று மணி நேரம் சாலைப்போக்குவரத்து பாதிப்பு. வனத்துறையினர் விசாரணை

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தெப்பக்காடு பகுதியில் இருந்து இருந்து மசினகுடிக்கு முதுமலை வழியாக மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை தெப்பக்காடு பகுதியில் இருந்து மசினகுடி செல்லக்கூடிய சாலையில் தண்டு மாரியம்மன் கோவில் அருகே சாலை நடுவே யானை ஒன்று இறந்து கிடந்தது.

இதனைத் தொடர்ந்து காலை முதல் சாலையின் இரு பக்கமும் வனத்துறையினர் வாகன போக்குவரத்தை துண்டித்தனர். இதனால் 3 மணி நேரம் சாலைப்போக்குவரத்து பாதிப்படைந்தது. எனினும் அந்த யானை மக்னா வகையை சேர்ந்த காட்டு யானை என்பதும் வயது 50 என்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக யானையின் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் உள்ள சூழ்நிலையில் யானையின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

எந்த ஒரு காரணத்தையும் வனத்துறையினர் இதுவரை தெரிவிக்காத நிலையில் மூன்று மணி நேரத்திற்கு பிறகு JCP இயந்திரம் மூலம் யானையை சாலை ஓரத்தில் அகற்றி பின்பு வாகன போக்குவரத்து தொடர்ந்தது. தற்பொழுது அந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்வதற்காக வனத்துறையினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு யானை தற்செயலாக இறந்ததா? அல்லது வேறு எது காரணங்களுக்காக இறந்ததா? என்பது தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com