

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் வசித்து வருகிறது. இந்நிலையில் கடையநல்லூர் வனப் பகுதியில் இன்று காலை சுமார் எட்டு மாத யானைக்குட்டி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், தோப்பினை சுற்றி போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி குட்டி யானை உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து இறந்த குட்டி யானையை உடற்கூறு ஆய்வு செய்து வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.