மதம் பிடித்து சுற்றித் திரியும் காட்டு யானை - யானைக்கு வாழை தண்டு வீசும் வனத்துறையினர்

பொள்ளாச்சி அருகே மதம் பிடித்து சுற்றித்திரியும் காட்டு யானைக்கு வனத்துறையினர் வாழை தண்டு வீசி எறிந்த நிலையில் யானை அதை சாப்பிட்டு சென்றது
மதம் பிடித்து சுற்றித் திரியும் காட்டு யானை - யானைக்கு வாழை தண்டு வீசும் வனத்துறையினர்
Published on

பொள்ளாச்சி அருகே மதம் பிடித்து சுற்றித்திரியும் காட்டு யானைக்கு வனத்துறையினர் வாழை தண்டு வீசி எறிந்த நிலையில், யானை அதை சாப்பிட்டு சென்றது. ஆழியார் வனப்பகுதியில், யானை மதம் பிடித்த நிலையில் கடந்த 5 நாட்களாக சுற்றி வருகிறது. இந்த யானையை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், இன்று காலை, யானையை கட்டுப்படுத்த வாழை தண்டுகளை யானைக்கு அருகில் வீசினர். யானை மெதுவாக நடந்து வந்து, அந்த வாழை தண்டுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இந்நிலையில், சுற்றுலா துறையினர் மற்றும் பொதுமக்கள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com