Elephant | "ஏய் எங்க போற.." - டோல்கேட்டில் நின்று அட்டகாசம் செய்த யானைகள் - திணறிய வாகன ஓட்டிகள்

x

சோதனைசாவடியை முற்றுகையிட்ட காட்டு யானை கூட்டம்

தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள வன சோதனை சாவடியை இடைமறித்தபடி காட்டுயானைகள் நின்றதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடுகின்றன. குறிப்பாக தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் வன சோதனை சாவடியில் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் சாலையின் நடுவே நின்றபடி வாகனங்கள் செல்ல முடியாமல் வழிமறித்து நின்றன. இதன் காரணமாக அவ்வழியே சென்ற பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சிறிது நேரம் காட்டு யானைகள் சாலையில் நகராமல் நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சமடைந்தனர். பின்னர் காட்டு யானைகள் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.


Next Story

மேலும் செய்திகள்