யானைகள் பராமரிப்பு பயிற்சி - தாய்லாந்து செல்லும் அதிகாரிகள்
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்தும், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் இருந்தும் கால்நடை மருத்துவர்கள், வன அதிகாரிகள், மற்றும் யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட 15 பேர் சென்னையிலிருந்து தாய்லாந்து புறப்பட்டனர். தாய்லாந்து நாட்டில் லம்பாங்கில் உள்ள தாய் யானை பாதுகாப்பு மையத்திற்கு செல்லும் இவர்கள், அங்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள யானைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன... கும்கி பயிற்சி எவ்வாறு அளிக்கபடுகிறது.... உள்ளிட்ட பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் வைத்து தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்ட அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.
Next Story
