காரை அடித்து நொறுக்கி பந்தாடிய யானை - அதிர்ச்சி வீடியோ.. மக்கள் செய்த செயல்
அசாமில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரை யானை அடித்து நொறுக்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலம் கவுஹாத்தியில், காயத்தால் அவதியுற்ற காட்டு யானை ஒன்று திடீரென ஊருக்குள் நுழைந்தது. பின்னர், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரை தலைகீழாக சாய்த்து சேதப்படுத்தியது. இதையடுத்து அங்கு திரண்ட மக்கள், தூரத்தில் இருந்தபடி யானையை அங்கிருந்து விரட்ட கூச்சலிட்டனர்.
அம்சாங், ஜோராபத், சத்கான் உள்ளிட்ட இடங்களில் காலில் காயத்துடன் இந்த யானை சுற்றித்திரிவதாக தெரிவித்த உள்ளூர்வாசிகள், இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
