"மின்சார கட்டண உயர்வு தவறான செயல்"- மின்சார பொறியாளர் அமைப்பு
ஜூலை மாதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது தவறான நடவடிக்கை என்று தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், மின்சார கட்டணம் 49 சதவீதம் உயர்த்தப்பட்ட போதிலும், ஒவ்வொரு ஆண்டும் அதே 24 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அரசு தரும் 520 கோடி ரூபாய் மானியம், மக்களை சென்றடையாது என்று கூறிய அவர், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதுதான் நஷ்டத்திற்கு காரணம் என்று தெரிவித்தார். தொடர்ந்து மின்சார விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு போதிய பணியாளர்கள் இல்லை என்பதே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
