ஸ்மார்ட் மீட்டர் மாட்டினால் மக்களுக்கு பாதிப்பு - மின் ஊழியர் சங்கம்

x

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கைக்கு, மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல், மின்வாரியமே நடத்த வேண்டும் எனவும் மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்