பணியின் போது மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி - தென்காசியில் அதிர்ச்சி

x

தென்காசியில் பணியின் போது மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குற்றாலத்தில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்த கடையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் மின்நகர் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் பழுது பார்க்க சக பணியாளர்களுடன் சென்றுள்ளார். அப்போது மின் இணைப்பை துண்டித்துவிட்டு வருவதாக சக ஊழியர் கூறி சென்ற நிலையில், ராமசாமி முன்னதாகவே ட்ரான்ஸ்பார்மரில் ஏறி பணி செய்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், தகவலறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்