முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு வட்டி : அரசு அதிரடி அறிவிப்பு….!!
முன்கூட்டியே செலுத்தப்படும் மின் கட்டணத்திற்கு வழங்கப்படும் வட்டியை, 2புள்ளி 7 சதவீதமாக நிர்ணயித்து, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், இரு மாதங்களுக்கு ஒரு முறை வீடுகளில், மின் பயன்பாட்டை கணக்கெடுக்கிறது.
கணக்கெடுத்த 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லை எனில், அபராதத்துடன் சேர்த்து கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில், வெளியூர் செல்வது உள்ளிட்ட காரணங்களால், குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே மின் கட்டணமாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு மின் வாரியம் ஆண்டு வட்டி வழங்குகிறது. ரிசர்வ் வங்கி வைப்பு நிதிகளுக்கு நிர்ணயிக்கும் வட்டியை பொறுத்து ஆண்டுதோறும், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், வட்டியை நிர்ணயம் செய்து வருகிறது. அந்த வகையில் வரும் 2022 - 23ஆம் நிதியாண்டிற்கான வட்டியை 2புள்ளி 7 சதவீதமாக நிர்ணயித்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
