கனெக்ஷனே கொடுக்காமல் வந்த கரண்ட்? ஷாக்கான விவசாயி
போச்சம்பள்ளி அருகே விவசாயிக்கு மின் இணைப்பே வழங்காமல் மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி தனது மாந்தோப்பிற்கு மின் இனைப்பு கோரி பணம் செலுத்தி விண்ணப்பித்திருந்த நிலையில், மின் இணைப்பை வழங்காமல் அதிகாரிகள் மின் கம்பிகளை பனை மரத்தில் கட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் விவசாயி சுப்பிரமணி செல்போனுக்கு மின் கட்டணம் செலுத்த கோரி குறுந்தகவல் வந்ததைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மின் கட்டணமும் செலுத்தி உள்ளார் . அப்போது அதிகாரிகளிடம் மின்னிணைப்பே வழங்காமல் மின்கட்டணம் கட்ட சொல்கிறீர்களே என்று கேட்டதற்கு அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்ததாக வேதனை தெரிவித்தார்.
Next Story
