E Bike | Fire Accident | பெருங்களத்தூர் அருகே தீப்பற்றி எரிந்த மின்சார இருசக்கர வாகனம்
பெருங்களத்தூர் அருகே தீப்பற்றி எரிந்த மின்சார இருசக்கர வாகனம்
E Bike | Fire Accident | பெருங்களத்தூர் அருகே தீப்பற்றி எரிந்த மின்சார இருசக்கர வாகனம்
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அருகே மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. பெருங்களத்தூரில் இருந்து மப்பேடு செல்லும் பிரதான சாலையில், மின்சார இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியதால், ஓட்டுநர் வாகனத்தை சாலையோரம் நிறுத்தி கீழே இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில் வாகனம் தீப்பற்றி, மளமளவென எரியத் தொடங்கியது. தீயை அணைக்க உடனடி தீயணைப்பு உபகரணங்கள் இல்லாததால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
