மின்சாரம் தாக்கி கால் நடைகள் பலி - போலீசார் விசாரணை
மதுரையில் தாழ்வாக இருந்த மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விளாங்குடி அருகே சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோப்பில், புதிதாக பொருத்தப்பட்டுள்ள மின்கம்பங்களின் மின்சார லயன்கள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி ஒரு பசு மாடு, இரண்டு கன்று குட்டி, நாய், கீரிப்பிள்ளை உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இது குறித்து சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
