மின்வேலி பலி - சடலத்தை மறைக்க முயன்ற கிணற்று உரிமையாளர் தற்கொலை

x

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, காணாமல் போன ஒருவர் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்த விசாரணைக்கு பயந்து கிணற்றின் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குல்லூர்சந்தை பகுதியை சேர்ந்த சுரேஷ், முயல்வேட்டைக்கு சென்ற போது மாயமானார். அவரது சடலம் நரசிம்மராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து, நரசிம்மராஜிடம் விசாரிக்க சென்றபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில், அனுமதியின்றி நிலத்தில் மின்வேலி அமைத்திருந்த நிலையில், முயலை விரட்டி சென்ற சுரேஷ், அதில் சிக்கி உயிரிழந்ததும், இதை மறைப்பதற்காக அவரது உடலை இழுத்து சென்று கிணற்றில் நரசிம்மராஜ் வீசியதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்