நடன இயக்குனர்கள் சங்க தேர்தல், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாக்களிப்பு

நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடன இயக்குனர்கள் சங்க தேர்தல், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
Published on

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை தியாகராயநகரில் உள்ள சங்கத்தின் அலுவலகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதியும், தேர்தல் அதிகாரியுமான பாலசுப்பிரமணியம் முன்னிலையில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தலைவர், செயலாளர், பொருளாளர், இரண்டு துணை தலைவர்கள், இரண்டு இணை செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில், தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் ஷோபி பவுல்ராஜ் மற்றும் தினேஷ் போட்டியிடுகின்றனர். துணை தலைவர் பதவிக்கு நடன இயக்குனர்கள் லலிதா ஷோபி மற்றும் சுஜாதா போட்டியிடுகின்றனர். நடிகர்கள் கமல்ஹாசன், சீமா உள்ளோட்டோர் வாக்களித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com