ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 500 குக்கர்கள் பறிமுதல் - குக்கர்களை ஏற்றி வந்த வாகனமும் பறிமுதல்

6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 குக்கர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 500 குக்கர்கள் பறிமுதல் - குக்கர்களை ஏற்றி வந்த வாகனமும் பறிமுதல்
Published on

மதுரையில் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 குக்கர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் தலைமையில் 70 பேர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் குழுவினர் மதுரை மாவட்டத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,காதக்கிணறில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னையில் இருந்து மதுரைக்கு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 எலக்ட்ரிக் குக்கர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.குக்கர்கள் கொண்டு வரப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆட்சியர் அலுவலகத்தில்அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com