

தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10 கோடி
பல்லடத்தில் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வங்கி பணம் 10 கோடி ரூபாய் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து வங்கி அதிகாரிகளிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அந்த வாகனத்தில் வங்கி ஊழியர்கள் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது.ஆனால் பணம் கொண்டு செல்லும் ஊர் பெயரில் மாற்றம் இருந்தையடுத்து, அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் வங்கி அதிகாரிகள் உரிய ஆவணத்தை சமர்ப்பித்ததையடுத்து பணம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.