

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் அரிவாளுடன் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரை தடுக்க முயன்ற டிஎஸ்பி வெங்கடேஷ், அரிவாளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.