ஆர்.கே.நகர் பணப்பட்டு வாடா வழக்கு : "ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது" - தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில், ரகசிய அறிக்கையை வெளியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் பணப்பட்டு வாடா வழக்கு : "ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது" - தேர்தல் ஆணையம்
Published on
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கில், ரகசிய அறிக்கையை வெளியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கையை பார்வையிட அனுமதிக்குமாறு, திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com