"தேர்தல் புகார் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை" - சத்யபிரத சாஹூ

தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஆண்டிபட்டியில் பணம் பறிமுதல் தொடர்பாக விரிவான அறிக்கை வரவில்லை என்றார். முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் புகார் வரும் அனைத்து இடங்களிலும் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்தார். ஓட்டுப்பதிவு தினத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் சத்யபிரத சாஹூ கேட்டுக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com