சொத்து பிரச்சினையில் மூதாட்டியை மரத்தில் கட்டிவைத்து தாக்குதல்

x

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே சொத்து பிரச்சினையில் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவேரிப்பட்டினம் அடுத்த ஆட்டுபாலன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த உண்ணாமலைக்கும், அவரது உறவினரான குமார் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில், பிரச்சினைக்குரிய நிலத்தில் உழவு வேலைகளை செய்த குமாரையும், அவரது மனைவியையும் உண்ணாமலை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார், அவரது மனைவி உள்ளிட்டோர், உண்ணாமலையை மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். தடுக்க வந்த அவரது உறவினரையும் கடுமையாக தாக்கி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்