கார் மோதி தூக்கிவீசப்பட்ட மூதாட்டி - அதிர்ச்சி காட்சி

கார் மோதி தூக்கிவீசப்பட்ட மூதாட்டி - அதிர்ச்சி காட்சி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போடிநாயக்கன்பட்டி பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்க முயன்ற 62 வயதான முத்தாயி மீது, பேளுக்குறிச்சியில் இருந்து அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மூதாட்டி, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#namakkal #rasipuram #accident #cctv

X

Thanthi TV
www.thanthitv.com