தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி பலி

தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி பலி
Summary

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது வேகமாக வந்த பைக் மோதி ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த 76 வயதான லெட்சுமி, வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்ல சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி மீது பைக்கும் ஏறியதால், படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய அந்த நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com