மூதாட்டி கொலை சம்பவம் - 7 மாதங்களுக்கு பின் சிறுவன் கைது

x

மூதாட்டி கொலை சம்பவம் - 7 மாதங்களுக்கு பின் சிறுவன் கைது

கடையநல்லூர் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை கொலை செய்த சம்பவத்தில் 7 மாதங்களுக்கு பின் போலீசார் சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டம் சின்னத்தம்பிநாடாரூர் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த பொண்ணு கிளி கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தனிப்படை போலீசார் மூதாட்டியின் உறவினர் கனி மற்றும் அவருடைய 17 வயது மகனிடம் விசாரணை நடத்தினர். இதில் முன்பகை காரணமாக கனியின் மகன் வயலுக்கு செல்லும் போது, மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி தொடர்ந்து அவதூறாக பேசியதால், ஆத்திரத்தில் கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்