Cuddalore || போலீஸிடம் தப்பி ஓடிய முதியவர் பலி - கடலூரில் அதிர்ச்சி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சூதாட்டத்தின் போது போலீசார் துரத்தியதால் வாய்க்காலில் இறங்கி தப்பிக்க முயன்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டார்.
மடப்புரம் கிராமத்தை சேர்ந்த முதியவரான சுப்பிரமணியன், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் நேரத்தை போக்க அப்பகுதியில் உள்ள சில முதியவர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது போலீஸ் துரத்தவே, வாய்க்காலில் இறங்கி தப்ப முயன்றார். ஆனால் வாய்க்காலுக்குள் சிக்கி மாயமானார். 19 மணிநேர தீவிர தேடுதலுக்குப்பின் சுப்பிரமணியன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story
