சொந்த பேரக்குழந்தைக்கே சூனியம் வைக்க பார்த்த `ஓல்டு கபுல்ஸ்'

சேலம் மாவட்டத்தில் 4 வயது குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில், பணத்திற்காக குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்ததாக கூறி பாட்டியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குழந்தையின் தாத்தாவும், அவரது நண்பரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களுக்கு பணத் தேவை இருந்ததாகவும், இதன் காரணமாக மகனின் குழந்தையை கடத்தி விற்பனை செய்ய முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் குழந்தையின் பாட்டி சாந்திக்கும் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரியவந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com