பால் வாங்க சென்ற அக்கா, தங்கைக்கு நடந்த பயங்கரம் - கொதித்தெழுந்த ஊர் மக்கள்

பால் வாங்க சென்ற அக்கா, தங்கைக்கு நடந்த பயங்கரம் - கொதித்தெழுந்த ஊர் மக்கள்
Published on

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழந்தார். மு.கோவில்பட்டியை சேர்ந்த பழனியப்பன்-ரேனுகா தம்பதியின் மகள்கள் கவி பிரபா, சாதனா ஆகிய இருவரும் பால் வாங்குவதற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது பழனியில் இருந்து காரைக்குடி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற அரசு பேருந்து மோதியது. இதில் தங்கை சாதனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கா அக்கா கவி பிரபா பலத்த காயங்களுடன் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். இதனால் உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com