

சத்துணவு திட்டத்திற்கு இன்று முதல் முட்டை கொள்முதல் செய்வதால் இந்திய முழுவதும் முட்டை விலை உயர வாய்ப்பு உள்ளதாக நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுதலைவர் டாக்டர் செல்வராஜ் அறிவித்துள்ளார் ..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீதிமன்ற அறிவுறுத்தல் படி தமிழக அரசும் உடனடியாக சத்துணவு திட்டத்தில் மீண்டும் முட்டை வழங்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதை சுட்டிக்காட்டி உள்ளார் .. ஆந்திராவிலும் சத்துணவுக்காக முட்டைகள் கொள்முதல் செய்து வருவதால் முட்டை விலை ஏறும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்