தினத்தந்தி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது

மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை
தினத்தந்தி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது
Published on
மதுரை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி 20 பேருக்கு தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தின் கீழ் தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கான நிதி உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் கிடைக்கும் ஒரே நாளிதழ் தினத்தந்தி தான் என புகழாரம் சூட்டினார். இந்த கல்வி உதவித் தொகையானது மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவும் வகையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com