மீண்டும் களம் இறங்கிய அமலாக்கத்துறை.. தனியார் நிறுவனங்களில் அதிரடி சோதனை | Chennai
சட்டவிரோத பண பரிமாற்ற புகார் தொடர்பாக தனியார் நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வடபழனியில் அடகு கடை மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வரும் வீரேந்திர மால் ஜெயின் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும், அசோக் நகரில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஐயப்பன் தொடர்பான இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதேபோல், பைனான்சியர் மோகன் குமாருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Next Story