"ஏற்றுமதிக்கான சிறந்த மாநிலங்கள் பட்டியல் - தேசிய அளவில் தமிழகம் மூன்றாமிடம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில், சிறந்த முதல் ஐந்து மாநிலங்களில், தமிழகம் மூன்றாம் இடம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
"ஏற்றுமதிக்கான சிறந்த மாநிலங்கள் பட்டியல் - தேசிய அளவில் தமிழகம் மூன்றாமிடம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
Published on

அரசின் கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செய்யப்படும் நிலை உள்ளிட்ட நான்கு அம்சங்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தை குஜராத்தும் இரண்டாம் இடத்தை மகாராஷ்டிராவும் பிடித்துள்ளது. ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 46 சதவீதமாகவும், ஆடைகள் ஏற்றுமதியில் 19 சதவீதமாகவும், மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 19 சதவிகிதமாகவும் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com