"வரலாற்று சிறப்பு மிக்க ஒப்புதல் அளித்த பிரதமருக்கு நன்றி"-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஒரே ஆண்டில் தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
"வரலாற்று சிறப்பு மிக்க ஒப்புதல் அளித்த பிரதமருக்கு நன்றி"-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுத்ததாகவும், அதை ஏற்று பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபரில், ஒரே நேரத்தில் 6 மருத்துவ கல்லூரிகளுக்கும், நவம்பரில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்ததாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போது கூடுதலாக மேலும் 2 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் பெறுவது வரலாற்று சாதனை என தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, இதற்கான மொத்த செலவு தொகையான மூவாயிரத்து 575 கோடி ரூபாயில், இரண்டாயிரத்து 145 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க அனுமதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்புதலை வழங்கிய பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் தமது மனமார்ந்த நன்றியை தமிழக மக்கள் சார்பில் கூறுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com