முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவை தொலைபேசியில் அழைத்து விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் விஜயகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.