"மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி இருந்தால் தமிழகம் வளம் பெறும்" - முதலமைச்சர்

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய கட்சிகளின் ஆட்சி அமைந்தால் தான், தமிழக மக்களுக்கு பலன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நெல்லை மாவட்டம், இட்டமொழியில் நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். இட்டமொழிக்கு வந்த அவருக்கு நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பிரபாகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com