சின்னத்திரை நட்சத்திரங்களின் மலேசிய கலை விழா நிகக்ழச்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மலேசியாவில் வரும் 28 தேதியில் சின்னத்திரை நட்சத்திரக் கலைஞர்களின் கலை விழா நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்த கலைவிழா சின்னத்திரை நட்சத்திர சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் சங்க உறுப்பினர்களின் குடும்ப நலனுக்காகவும் நடைபெறுவது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார். கலை விழா நிகழ்வுகள் சிறப்புடன் நடைபெற அயராது உழைத்த அனைத்து தரப்பினருக்கும் வாழ்த்துக்களையும் முதலமைச்சர் கூறியுள்ளார்.