"மன்னிப்பு கேட்பாரா எடப்பாடி பழனிசாமி?"- அமைச்சர் ரகுபதி கேள்வி..
கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் பயணித்த காரை வழிமறித்த வழக்கு குறித்து அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் கைதான சந்துரு என்பவர் அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் என அவரே ஒப்பும் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், திமுக மீது வீண் பழி சுமத்தி அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
Next Story
