பெண்களை துரத்திய விவகாரம்.. உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பறந்த கடிதம் | ECR Car Chase Issue
ஈ.சி.ஆர். சாலையில் திமுக கொடி கட்டிய காரில், பெண்களை துரத்திய விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள கானத்தூர் முட்டுக்காடு பகுதியில் பெண்களை, மற்றொரு காரில் வந்த இளைஞர்கள் சிலர் துரத்திச் சென்று வழிமறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. துரத்திய காரில் திமுக கொடி கட்டியிருந்த நிலையில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி தலைமை நீதிபதிக்கும் பதிவாளருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த சிலரை காப்பாற்ற நினைப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
