இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி பயணம் - ஸ்டாலின்

உற்பத்தித் துறை மிகவும் பாதிக்கப்பட்டு அதன் வளர்ச்சி நிலைகுலைந்துப் போய் நிற்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி பயணம் - ஸ்டாலின்
Published on
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உற்பத்தித் துறை மிகவும் பாதிக்கப்பட்டு, அதன் வளர்ச்சி நிலைகுலைந்துப் போய் நிற்பதாக தெரிவித்துள்ளார். நாற்பது ஆண்டு காலத்தில் நாடு கண்டிராத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பா.ஜ.க. அரசின் கவனமும், முன்னுரிமைகளும் வேறு வகையாக இருப்பது கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே,இந்தியப் பொருளாதாரம் உலக நாடுகள் மத்தியில் தலை நிமிர, பிரதமர் மோடி அவர்கள் பொருளாதார நிபுணர்களைக் கலந்து ஆலோசித்து முனைப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் வலியுறுத்தி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com